கோவை அரசு மருத்துவமனைக்கு குண்டு மிரட்டல் விடுத்த வாலிபருக்கு வலை

கோவை: கோவையில் இருந்து சென்னையில் உள்ள போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு கடந்த 24ம் தேதி போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றேன். ஆனால் டாக்டர்கள் உரிய முறையில் சிகிச்சை தரவில்லை. யாரையும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலையிருக்கிறது. என் உடலில் வெடிகுண்டு வைத்து கொண்டு வெடிக்க செய்வேன். அப்போதுதான் நான் யார் என உங்களுக்கு தெரியும்’’ எனக்கூறி இணைப்பை துண்டித்தார். இதுதொடர்பாக சென்னை போலீசார் கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertising
Advertising

ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, அது குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது பீர் (35) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இவர் மது போதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியதாக தெரிகிறது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: