வீட்டை உடைத்து 10 சவரன் திருட்டு

புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம், டீச்சர்ஸ் காலனி 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (60). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி. இவரது மனைவி பத்மா (56). கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மயிலாப்பூரில் நண்பர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.  நேற்று முன்தினம் இருவரும் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

Advertising
Advertising

Related Stories: