குழந்தை கடத்திய விவகாரம் தாய், மகள் கைது

சென்னை: மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் ஜானி - ரந்தேஷா தம்பதி. இவர்களது 8 மாத குழந்தை ஜான். மெரினா கடற்கரையில் தங்கி பலூன் வியாபாரம் செய்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு இவர்களிடம் வந்த ஒரு பெண், ‘‘உங்களது குழந்தைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன்’’ என கூறி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் செய்தனர். இந்நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த பெண்ணை பூக்கடை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

Advertising
Advertising

விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பெண், சைதாப்பேட்டை சேர்ந்த ரேவதி (26) என்பதும், கணவர் இளங்கோவன் (30) என்பதும் 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் கடத்தியது தெரிந்தது. இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து ரேவதி மற்றும் அவரது தாய் ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.  மேலும் குழந்தையையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: