இந்தியா - நேபாள எல்லையில் 2வது சோதனை சாவடி துவக்கம்

புதுடெல்லி: இந்தியா - நேபாள எல்லையில் இந்திய அரசு உதவியுடன் ேஜாக்பானி-பிராட்நகர் பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ரூ.140 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோதனை சாவடியால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மேம்படும் என கருதப்படுகிறது. 260 ஏக்கர் அளவுக்கு பரந்துள்ள இந்த ஒருங்கிணைந்த சோதனை சாவடி தினமும் 500 சரக்கு லாரிகளை கையாளும் திறன் கொண்டது. இந்த நிலையில், பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் சர்மா ஒலியும் இணைந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று இந்த திட்டத்தை தொடங்கி ைவத்தனர். கடந்த 2018ம் ஆண்டில் ரகுசால்- பிர்குன்ஜ் பகுதியில் முதல் சோதனை சாவடி தொடங்கப்பட்டுள்ள நிலையில் இது 2வது சோதனை சாவடியாகும்.

Related Stories: