சிவகாசி அருகே பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை

சிவகாசி: சிவகாசி அருகே 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப் பட்டார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளி மகள் ராதா (8, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர், அருகில் உள்ள கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை சித்துராஜபுரம் காட்டுப்பகுதியில் காயங்களுடன் அந்த சிறுமி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவள் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், சிவகாசி அரசு மருத்துவமனையில் குவிந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertising
Advertising

Related Stories: