தெலங்கானாவில் பரபரப்பு,..வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: பொதுமக்கள் அலறி ஓட்டம்

திருமலை: தெலங்கானாவில் ஐதராபாத் அருகே சாத்நகர்  படேல் சாலை அருகே  காம்மதனம் வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் சாத்நகரில் ஒரு வீட்டின் மாடியில் நேற்று அதிகாலை சிறுத்தை  பதுங்கியிருப்பதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.     பின்னர் இதுகுறித்து உடனடியாக சாத்நகர்  போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சாத்நகர்  போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுத்தை பிடிபடவில்லை. மேலும் சிறுத்தையை பிடிக்க முயன்றபோது வனஅதிகாரி ஒருவரை தாக்கியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.  நீண்ட போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடித்து ஐதராபாத் வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: