சிஏஏ ஆதரவு போராட்டத்தில் பெண் கலெக்டரிடம் அத்துமீறல் தொண்டருக்கு விட்டார் ‘பளார்’: துணை ஆட்சியரை முடியை பிடித்து இழுத்தனர்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ராஜ்கார்க் பகுதியில் சிஏஏவிற்கு ஆதரவு தெரிவித்து பாஜ சார்பாக நடந்த போராட்டத்தில் பாஜ தொண்டருக்கு கலெக்டர் ‘பளார்’ என அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ம.பி.யின் ராஜ்கார்க் பகுதியில் நேற்று சிஏஏ.வுக்கு ஆதரவு தெரிவித்து பாஜ சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதால், அங்கு வந்த கலெக்டர் நிதி நிவேதா அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் இவர்கள் கோரிக்கையை ஏற்காத பாஜ.வினர், அங்கு போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக பாஜ தொண்டர்கள் கலெக்டர் நிதி நிவேதா மற்றும் துணை ஆட்சியர் பிரியா வர்மாவை தாக்கினர்.

Advertising
Advertising

இதுகுறித்து, கலெக்டர் நிதி நிவேதிதா கூறுைகயில், ‘‘ராஜ்கார்க் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி போராட்டம் செய்ய பாஜ.வினர் கூடினர். பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். நாங்கள் அதை தடுக்க சென்றபோது எங்களையும் தாக்கினர். தொண்டர்கள் சிலர் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். ஒருவர் தவறாக சீண்ட முயன்றனர். அதனால் அந்த நபரை அறைந்தேன். இதை தட்டிக்கேட்ட துணை கலெக்டர் பிரியா வர்மாவையும் தாக்கினர். அவரின் கையை பிடித்து முறுக்கி திருகினர். பின் பிரியா வர்மாவின் தலைமுடியை பிடித்து தர தரவென இழுத்து சென்றனர்’’ என்றார்.

Related Stories: