நிர்வாக ரீதியான சிக்கலை தீர்க்க முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் அமைச்சு பணியாளர் நியமிக்க கோரிக்கை

வேலூர்: பள்ளிக்கல்வித்துறையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் 150 கண்காணிப்பாளர் பணியிடங்கள் மற்றும் 26 உதவியாளர் பணியிடங்களையும் நிரப்பாததால் நிர்வாக ரீதியான சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குமுறல்கள் எழுந்துள்ளன. பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக ரீதியில் சில மாதங்களுக்கு முன்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2 அல்லது 3 வட்டாரங்கள் ஒரு கல்வி மாவட்டமாக ஆக்கப்பட்டு 62 புதிய கல்வி மாவட்டங்களுடன் மொத்தம் 120 மாவட்ட கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதோடு முதன்மை கல்வி அலுவலருக்கு, கற்பித்தல் சார்ந்த ஆய்வு பணிகளுக்கு உதவுவதற்காக 2 உதவியாளர்கள் உள்ளனர்.

இவர்கள் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக உள்ளனர். இதனால் நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. எனவே, முதன்மை கல்வி அலுவலகங்களில் நிர்வாக அலுவலர் பணியிடம் உருவாக்கி அமைச்சுப்பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதேபோல் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. மேலும் அலுவலகங்களில் கிளார்க் உட்பட பல்வேறு மட்டங்களில் போதிய பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதுதவிர 150 கண்காணிப்பாளர் பணியிடங்களையும் உருவாக்கி நிரப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: