நிலக்கரி ஒப்பந்தம் : அதானி குழுமத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு

டெல்லி: நிலக்கரி ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக அதானி குழுமத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிக்க அதானி நிறுவனத்தை தேர்வு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து அதானி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் : அதானி குழுமம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகியோர் மீது சிபிஐ குற்றவியல் சதித்திட்டம், மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இது மிகவும் பழைய செய்தி அதானி குழுமம் நிலக்கரி வழங்குவதற்கான செயல்முறைகள் மற்றும் தொடர்புடைய சட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன. நிலக்கரி வழங்குவதில் அதானி நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை. இது முதல் விசாரணை அறிக்கை மட்டுமே’, என தெரிவித்துள்ளார்.

Related Stories: