ஆளுநர் கிரண் பேடியை மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமரிடம் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுடெல்லி: புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கை வைத்துள்ளேன். அதில், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மத்திய அரசால் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதைத்தவிர முக்கியமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் தொல்லை கொடுத்து வரும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை உடனடியாக மாற்ற வேண்டும் என அவரிடம் வலியுறுத்தி உள்ளேன். கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாகவும், அதேபோல் புதுவை வளர்ச்சிக்கு கண்டிப்பாக மத்திய உதவும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர் பிரச்னை குறித்து விளக்கமளித்தேன். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புதுவை மாநிலத்தில் இருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதித்தேன். மேலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதியை வழங்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். 15வது நிதி கமிஷனில் புதுவையை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினேன். மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கிடப்பில் இருக்கும் விழுப்புரம் நாகப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திளேன் என்றார்.

Related Stories: