உயர்மின் அழுத்த கம்பியால் ஆபத்து

பக்கிங்காம் கால்வாய் அருகே தற்போது மேம்பாலத்திற்கான தரைதளம் அமைக்கப்பட்டு வருகிறது .இந்த பாலத்திற்கு மேலே வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து புறநகருக்கு செல்லக்கூடிய உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கிறது. இந்த கம்பிக்கு கீழே ராட்சத பொக்லைன் மற்றும் இயந்திரங்களை வைத்து பணிகள் நடைபெறுவதால் உயர் அழுத்த மின்கம்பியில் இயந்திரங்கள் பட்டால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படியே பணிகள் முடிந்தாலும் அதன் பிறகு பாலத்தின் மீது வாகனங்கள் சென்றால் மேலே உள்ள உயர்மின் அழுத்த கம்பியால் விபத்து ஏற்படும் நிலைதான். எனவே, உயர் அழுத்த மின் கம்பியை இன்னும் உயரத்தை அதிகப்படுத்தவோ அல்லது மாற்றுப் பாதையிலோ அமைக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வடசென்னை அனல்மின் அதிகாரிகளுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மேம்பால பணி தாமதமாவதாக கூறப்படுகிறது.

Related Stories: