கடமலைக்குண்டு அருகே பழமையான கல்வெட்டுகள் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்வார்களா?...கிராம மக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு: கடமலைக்குண்டு அருகே விளைநிலங்களில் காணப்படும் பழமையான கல்வெட்டுகள் மற்றும் தடுப்பு சுவர் குறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள அய்யனார்கோயில் மலைப்பகுதி மற்றும் வைகை ஆற்றங்கரையோரத்தில் உள்ள விளைநிலங்களில் தொன்மையான கல்வெட்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆற்றின் கரையோரத்தில் உள்ள விளைநிலத்தில் சுமார் 1 கிமீ தூரத்துக்கு கருங்கற்கள் மற்றும் மண்ணால் கட்டப்பட்ட பழமையான தடுப்பு சுவர் காணப்படுகிறது.

இந்த தடுப்பு சுவர் மூலம், பழங்காலத்தில் இப்பகுதியில் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயம் நடந்திருக்கலாம் என்று கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று கிராமசபை கூட்டங்களில்  இப்பகுதி விவசாயிகள் பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்ைல. எனவே இப்பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த முன் வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

Related Stories: