முப்படை தளபதி தலைமையிலான ராணுவ விவகார துறைக்கு 40 செயலாளர்கள் நியமனம்

புதுடெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் கீழ் செயல்படும் ராணுவ விவகாரத் துறைக்கு 40 செயலாளர்கள் அந்தஸ்திலான அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.  தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றும் தனித்தனியாக செயல்படாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. இதற்காக, முப்படை தலைமை தளபதி என்ற பதவியை புதிதாக உருவாக்கியது. தரைப்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் பிபின் ராவத்தை முப்படையின் முதல் தலைமை தளபதியாக மத்திய அரசு நியமித்தது. இவர் கடந்த 1ம் தேதி பொறுப்பேற்றார். இவர் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ராணுவ ஆலோசகராகவும் செயல்படுவார்.  

இவரது தலைமையின் கீழ் செயல்பட, ராணுவ விவகாரத்துறை என்ற புதிய துறையும் நிறுவப்பட்டு உள்ளது. இத்துறையில் முப்படை தலைமை தளபதிக்கு உதவியாக செயல்பட 2 இணை செயலாளர்கள், 13 துணை செயலாளர்கள், 25 உதவி செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

Related Stories: