சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாணவர் அணி கூட்டம்

சென்னை: திமுக மாணவர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அலுவலகத்தில் ேநற்று நடந்தது. மாநில மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இணை, துணைச் செயலாளர்கள் கோவி.செழியன் எம்.எல்.ஏ., மன்னை த.சோழராஜன், ஈரோடு பி.ஆர்.எஸ்.ரங்கசாமி, எஸ்.மோகன், வீ.கவிகணேசன், அதலை பி.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், இந்தாண்டு ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க 6.1.2020கடைசி நாள் என்ற நிலையில், இரண்டே நாட்கள் இடைவெளி இருக்கையில்,‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்து ஒரு நடுப்பகல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

‘நீட்’ தேர்வு ரத்து கோரி தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய இரண்டு சட்ட மசோதாக்களை மத்திய அரசிடம் வாதாடி ஒப்புதல் பெற முடியாதபடுதோல்வியை திசைதிருப்பவும், மாணவ, மாணவிகளுக்கு எடப்பாடி

பழனிசாமி ஆட்சியில் தொடர்ந்து செய்யப்பட்ட மாபெரும் மோசடியை மூடிமறைக்கவும் திட்டமிட்டு அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்ற நிலையைஅடைந்திட இரண்டே வழிகள்தான் உள்ளன. திமுக தலைவரும், திமுக மாணவர் அணியும் தொடக்கத்திலிருந்து வலியுறுத்தியபடி சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி, அனைத்து கட்சிகளின் சட்டமன்ற ஆதரவோடு மீண்டும் சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும். அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி, தமிழக மக்களின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றி, உச்ச நீதிமன்றத்தில் உரிய ஆதாரமாக தெரிவிப்பது அதனை உடனடியாக செய்ய எடப்பாடி அரசு முன்வருவது ஒன்றே நிரந்தர தீர்வாகும்.

இந்த அவசரகதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது முறைப்படி மூத்த சட்ட நிபுணர்களைக் கொண்டு வாதாடி, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்காமல் எடப்பாடி அரசு ஆவன செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக திமுக தலைவருக்கு நன்றி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: