தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறையை மீறி திமுக கூட்டணி மகத்தான வெற்றி: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: அதிமுகவின் அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறையை மீறி திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு என கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள் மாவட்டங்களில் முகாமிட்டும், பணத்தை வாரியிறைத்தும் அதிமுக பின்னடவை சந்தித்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Related Stories: