அயர்லாந்து பிரதமர் கோவா வருகை

பனாஜி: அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர், புத்தாண்டு தினத்தை குடும்பத்தினருடன் கோவாவில் கொண்டாடுவதற்காக கோவா வந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அசோக் வராத்கர் கடந்த 1960ம் ஆண்டு மருத்துவராக பணிபுரிய இங்கிலாந்து சென்றார். இவரது மூன்றாவது மகன் லியோ வராத்கர், 2017ம் ஆண்டு முதல் அயர்லாந்து பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாட அவர்  கோவா வந்துள்ளார். தனிப்பட்ட முறையிலான சுற்றுப்பயணம் என்பதால், அவர் அரசு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. சிந்த்துர்க்கில் வராத் கிராமத்தில் உள்ள மூதாதையர் இல்லத்திற்கு நேற்று சென்ற அவருக்கு  பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: