தமிழக 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையாற்றிய தமிழக அமைச்சர்கள்

தூத்துக்குடி: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மற்றும்  30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து  முடிந்தது. இதில் குளறுபடி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமான இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து, 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி  அமைப்புகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில்

தங்கள் ஜனநாயகக் கடமையாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் நீன்ற வண்ணம் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தமிழக  அமைச்சர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடியில் தமிழக உயர்கல்வித்துறை  அமைச்சர் கே.பி. அன்பழகன் தனது வாக்கை பதிவு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் சிதம்பராபுரம் இந்து தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் செய்தி  மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது குடும்பத்துடன் சென்று வாக்களிதார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றிய சேவூர் ஊராட்சி  ஒன்றிய பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தனது வாக்கை பதிவு செய்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் சுற்றுச்சூழல் அமைச்சர் வாக்களித்தார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் சிந்தகம்பள்ளி கிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை  வாக்களித்தார். அவருடன் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரனும் தனது வாக்கினை பதிவு செய்தார்.    

Related Stories: