ஆஸ்திரியாவிற்கான இந்திய தூதர் தாராளம்: வீட்டு வாடகைக்கு மாதம் ரூ.15 லட்சம் செலவு...நாடு திரும்ப வெளியுறவு அமைச்சகம் உத்தரவு

டெல்லி: தங்கியிருந்த வீட்டின் வாடகைக்கு ரூ.15 லட்சம் செலுத்திய ஆஸ்திரிய நாட்டிற்கான இந்திய தூதரை உள்துறை அமைச்சகம் திரும்ப அழைத்துள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாட்டின் நலனுக்காக பல்வேறு நடவக்கை எடுத்து வருகிறது. கருப்பு  பணத்தை ஒழிக்க வேண்டி பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு அதிகாரிகள் லஞ்சம் மற்றும்  முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கட்ட ஓய்வு மற்றும் துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியில் உள்ளவர்களையும் மத்திய வெளியுறவுத்துறை கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரிய  நாட்டிற்கான இந்திய தூதர் ரேணு பாலின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய இருந்தது. இதனிடையே, ரேணு பால் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக  எழுந்த புகாரின்பேரில் வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரனை நடத்தியது. அந்த விசாரனையின் அறிக்கையில், ரேணு பால் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும்,  நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதும் உறுதிபடுத்தப்பட்டது. மேலும், தாம் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு, மாத வாடகையாக இந்திய மதிப்பில் ரூ.15  லட்ச செலவழித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரேணு பாலின் தூதருக்கான அனைத்து அதிகாரங்களும் ரத்து செய்யப்பட்டு, நாடு திரும்ப மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: