உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் : கலெக்டர், எஸ்.பி.,யிடம் திமுக மனு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறும் வகையில வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அலுவலர்களை இடமாற்றம் என கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், போலீஸ் எஸ்.பி., அரவிந்தன் ஆகியோரிடம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு.எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் மனு கொடுத்தனர். அப்போது, எம்எல்ஏக்கள் வி.ஜி. ராஜேந்திரன்,ஆ.கிருஷ்ணசாமி மற்றும் கழக வழக்கறிஞர்கள் எஸ்.மூர்த்தி, பி.கே.நாகராஜன், ரவிச்சந்திரன், ரவிக்குமார், பாஸ்கர், சசி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: