`உண்மையும் பொய்யும்’ என்ற பெயரில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 2 புதிய வீடியோக்கள் வெளியீடு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் 2 புதிய வீடியோக்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் வேறுபாடுகள் என்ற தலைப்பில் 2 வீடியோக்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. `உண்மையும் பொய்யும்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோக்களில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்: குடியுரிமை திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து தங்கியுள்ள இந்து, சீக்கியர்கள், ஜெயின்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும் வெளிநாட்டு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவானது. குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் உள்ளிட்ட எந்த இந்திய குடிமகனையும் பாதிக்காது. இந்த சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் எந்த குடிமகனின் குடியுரிமையும் பறிக்கப்படாது. அரசியலமைப்பு சட்டப்படி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை அனுபவிக்கலாம். குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவும் வெவ்வேறானவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: