இளையான்குடி பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

இளையான்குடி :  இளையான்குடி பகுதியில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்  சாகுபடி செய்வதில், விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். இளையான்குடி பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் வறட்சியால் நெல் மற்றும் மிளகாய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் டேங்கர் மற்றும் டிராக்டரில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, மிளகாய் செடிகளை விவசாயிகள் காப்பாற்றி வந்தனர். கடந்த ஆண்டு உள்ளூர் பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் போதிய மழை இல்லாததால் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அதனால் கடந்த ஆண்டு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது சின்ன வெங்காயம் வரத்து குறைவு, பற்றாக்குறை காராணமாக அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 140க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்தால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் இளையான்குடி பகுதியில் உள்ள சாலைக்கிராமம், சூராணம், சாத்தனூர், கோட்டையூர், சிறுபாலை, கபேரியேல்பட்டிணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் செடியில் ஊடுபயிராக சின்ன வெங்காயத்தை அதிகளவில் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories: