நிதின் கட்கரி விளக்கம் சாலை கட்டமைப்பே விபத்துகளுக்கு காரணம்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நடப்பதை தவிர்க்க, சாலைகளை சீரமைக்க 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விபத்துகள் அதிகரிக்க வாகனங்களும், ஓட்டுனர்களும் மட்டுமே காரணமல்ல. சாலைகள் சரிவர கட்டமைக்கப் படாததும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எல்லைப் பகுதிகள், கடலோர சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் சிறிய துறைமுகங்களுக்கும் சாலை இணைப்பு வழங்குதல், தேசிய வழித் தடத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து போக்குவரத்து அமைச்சகம் விரிவான ஆய்வு மேற்கொண்டது.  `பாரத்மாலா’ திட்டத்தின் கீழ், ‘சாகர்மாலா’ திட்டத்தை ஒருங்கிணைத்து பொருளாதார வழித்தடங்கள், கடலோர வழித்தடங்களை தொழிற்பேட்டைகளுடன்  இணைக்கும் வழித்தடத்தை மேம்படுத்தவும் பரிசீலிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 26,200 கி.மீ. பொருளாதார வழித்தடம், 8,000 கி.மீ. மாநிலங்களுக்கு இடையிலான வழித்தடம், 7,500 கி.மீ. கடலோர இணைப்பு வழித்தடம், 5,300 கி.மீ. சர்வதேச நாடுகளுடனான இணைப்பு சாலை, 4,100 கி.மீ. கடலோரம் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் சாலை, 1,900 கி.மீ. விரைவு சாலை அமைக்கப்பட உள்ளன.

Related Stories: