மயிலாடுத்துறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை

மயிலாடுத்துறை: மயிலாடுத்துறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க கோரிக்கை முதலமைச்சரிடம் மனு அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வணிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கத்தினர் நாகப்பட்டினத்தில் புதியதாக மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது தேவையற்றது என்று தெரிவித்தனர். மேலும் மயிலாடுத்துறையில் இருப்பவர்கள் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அல்லது திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சூழல் இருப்பதாக அவர்கள் கூறினார்.

மேல் சிகிச்சைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளதால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மயிலாடுத்துறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க கோரிக்கை பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அரசு கேட்டும் நிலத்தை தானமாக வழங்க பலர் தயாராக வழங்க உள்ள நிலையில் மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை ஆகும்.

Related Stories: