துணிக்கடை அதிபர் வீட்டில் 1.8 லட்சம், நகை திருடிய வேலைக்கார பெண் கைது

சென்னை:  சென்னை ஆர்.ஏ.புரம் கேசவ பெருமாள்புரம், சென்ட்ரல் அவென்யூவை சேர்ந்த தொழிலதிபர் ரவீந்திரன் (64) இவர், கடந்த 4ம் தேதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், எனது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.1.8 லட்சம் பணம், 1,100 அமெரிக்க டாலர் மற்றும் 2 வைர கம்மல், 1 வைர டாலர் மாயமாகி உள்ளது. என கூறியிருந்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்திரன் வீட்டில் வேலை செய்யும் 3 வேலைக்கார பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சீதா என்ற வேலைக்கார பெண் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அதை தொடர்ந்து சீதாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துனர். அவரிடம் இருந்து அமெரிக்கா டாலர், ரூ.1.8 லட்சம் மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: