நிர்மலா சீதாராமன் தகவல் தேர்தல் நிதி பெற ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

புதுடெல்லி; ‘‘ஸ்டேட் வங்கியின் தேர்தல் நிதி பத்திரம் மூலம் நிதி பெற ரிசர்வ் வங்கி எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை,’’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஸ்டேட் வங்கியின் தேர்தல் நிதி பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: ரிசர்வ் வங்கியின் மத்திய ஆணைய குழு கூட்டம் 2017ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நடைபெற்றது.

அப்போது, ஸ்டேட் வங்கியில் தேர்தல் பத்திரம் மூலம் நிதி திரட்டும் பணியை ரிசர்வ் வங்கி மறைமுகமாக ஏற்றது. அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே தேர்தல் நிதி பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>