சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

தண்டையார்பேட்டை: வியாசர்பாடியை சேர்ந்த 11 வயது சிறுமி நேற்று காலை பெரம்பூர் ரமணா நகரில் பூப்பந்து பயிற்சிக்கு சென்று, அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர், சிறுமியை பார்த்து “எங்கம்மா போகனும்  வா அழைத்து சென்று வீட்டில் விடுகிறேன்”, என கூறியுள்ளார். சிறுமியும்  ஆட்டோவில் ஏறி உள்ளார். ஆனால், வீட்டுக்கு அழைத்து செல்லாமல், பெரம்பூர் எம்.பி.எம் தெருவில் உள்ள சுடுகாடு அருகே காலி இடத்திற்கு அழைத்து சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி அலறி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டுள்ளனர்.

அதற்குள் ஆட்டோவுடன் டிரைவர் தப்பிவிட்டார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள்  எம்.கே.பி. நகர் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் ஆனால்  போலீசார் வராததால், பொதுமக்கள் சிறுமியின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அதே பகுதியில் பதுங்கி இருந்த   ஆட்டோ டிரைவரை பிடித்து தர்மஅடி கொடுத்து எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில்  தஞ்சாவூரைச் சேர்ந்த மாரிமுத்து (55) என்பதும், இவர் இதே பகுதியில் தங்கி  ஆட்டோ ஓட்டி வருவது விசாரணையில் தெரியவந்தது. இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>