ஐயப்பன் கோயிலில் பக்தர் போல் நுழைந்து ஐ- போன், பணம் திருடிய கொள்ளையன் சிக்கினான்

சென்னை: கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் புகுந்து பெண்ணிடம் ஐ-போன், ஆயிரம் ரூபாயை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது ெசய்தனர்.சென்னை நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துமாரியப்பன் (33). இவர், ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்துள்ளார். கடந்த 6ம் தேதி கே.ேக.நகர் பொன்னம்பலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில்  இவருக்கு இருமூடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது முத்துமாரியப்பன் தனது ஐ-போன் மற்றும் ஆயிரம் ரூபாயை ஒரு பையில் ைவத்து தனது மனைவி பிரதீபாவிடம் கொடுத்துள்ளார். கூட்ட நெரிசலில் பிரதீபா வைத்திருந்த பை மாயமானது. பின்னர் சம்பவம் குறித்து பிரதீபா கே. ேக.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து, ஐயப்பன் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, பக்தர் போல் ஒருவர் பிரதீபாவிடம் இருந்து பையை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.கொள்ளையனின் புகைப்படம் மற்றும் திருடப்பட்ட ஐ-போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, காரம்பாக்கம் அருணாச்சலம் நகர் பாரதி சாலையை சேர்ந்த பிரபல கொள்ளையன் செந்தில்குமார் (47) காட்டியது தெரிந்தது.  இவன் திருமண நிகழ்ச்சிகள், திருவிழா காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் செந்தில்குமாரை கைது செய்து ஐ-போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>