வயநாட்டில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

வயநாடு: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைக்குள் பாம்பு கடித்து உயிரிழந்த 10 வயது சிறுமியின் பெற்றோரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரி அருகே புத்தன்குந்நு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசிஸ். இவரது மகள் ஷஹ்லா ஷெரின் (10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். கடந்த 20ம் தேதி மாலை மாணவி வகுப்பறையில் இருந்தபோது சுவரில் இருந்த துவாரம் வழியாக வந்த பாம்பு அவரை கடித்தது.

அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் ஆசிரியர்கள் அலட்சியம் காட்டினர். இதனால், மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விவகாரம் கேரளாவில் பூதாகரமாக வெடித்தது. இதனிடையே பாம்பு கடித்து இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான  ராகுல் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் வயநாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி சுல்தான் பத்தேரியில் உள்ள  வக்கீல் அப்துல் அஜிஸ் வீட்டுக்கு சென்று அவர் ஷகாலாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Stories: