மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினார்

ஆலந்தூர்: கிண்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக  நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.கிண்டி நேரு நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (25). கார் டிரைவர். இவரது மனைவி இலக்கியா (24). இவர் கிண்டியில் உள்ள தனியார் மால் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். கடந்த 1ம் தேதி அதிகாலை ஜெயராஜ் அலறி கூச்சலிடும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது, இரவு தனக்கும், இலக்கியாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் படுத்து தூங்கியதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது இலக்கியா தூக்கில் தொங்கியது தெரிய வந்ததாகவும் ஜெயராஜ் கதறி அழுதார்.பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இலக்கியாவை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இலக்கியா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இலக்கியாவிற்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதனிடையே, இலக்கியா உடலை பிரேத பரிசோதனை செய்தபின் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

Advertising
Advertising

இந்தநிலையில் இலக்கியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில்,  இலக்கியா தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், கிண்டி போலீசார் திருவண்ணாமலை சென்று ஜெயராஜை சென்னைக்கு கொண்டு வந்து நடத்திய விசாரணையில்,  ஜெயராஜ் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.அதில், இலக்கியா வேலைக்கு செல்லாமல் வீட்டில் சமையல் செய்யாமல், ஒட்டலில் வாங்கி சாப்பிட்டு வந்தார். இதனால் ஊரில் உள்ள தனது பெற்றோரை சென்னைக்கு அழைத்து வந்து உடன் தங்க வைத்தால் சமையல் செய்து தருவார் என்று நினைத்தேன். அதற்கு இலக்கியா மறுத்ததால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. கடந்த மாதம் 30ம் தேதி இரவு மீண்டும் நடந்த தகராறில் எனது தாயை கெட்ட வார்த்தைகளில் இலக்கியா திட்டி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். கோபத்துடன் இருந்த நான் தூங்கி கொண்டு இருந்த இலக்கியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அதில் இருந்து தப்பிக்க இலக்கியா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினேன். என தெரிவித்துள்ளார். இதையடுத்து இலக்கியாவின் தற்கொலை வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி ஜெயராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: