சூடான் ஆலை தீ விபத்து: காணமால் போன 3 தமிழர்களின் நிலையை கண்டடிய நடவடிக்கை...பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: சூடான் தீ விபத்தில் காணமால் போன 3 தமிழர்களின் நிலையை கண்டடிய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கடிதம் எழுதியுள்ளார்.

சூடானில் ஏற்பட்ட தீ விபத்து:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை  மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள்  தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிற்சாலைக்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென  பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து அந்நாட்டு அரசின் விசாரணையில், பாதுகாப்பு உபகரணங்கள்  இல்லாததால் விபத்தை தடுக்க முடியாமல் போனது தெரியவந்தது. சூடானில் நாட்டில் பீங்கான் ஆலையில் 50 இந்தியர்கள் உட்பட பலர் பணியாற்றி  வந்தது குறிப்பிடத்தக்கது.

23 இந்தியர்கள் உயிரிழப்பு:

இந்திய தூதரகம் அளித்துள்ள தகவலின்படி, சூடானில் ஏற்பட்ட தீ விபத்தினால் 23 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்தில் தமிழகத்தைச்  சேர்ந்தவர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்:

சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் தமிழர்கள் பலியானதாகவும், இந்தியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஆலையில் இந்தியர்கள் 60 பேர் பணியாற்றி வந்ததாகவும், காயமடைந்த இந்தியர்களுக்கு மருத்துவமனையில்  உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டுவிட்டரில் தெரிவித்தார். மேலும், சூடான் தீ விபத்து தொடர்பாக தகவல் அறிய +249-921917471 என்ற  எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

முதல்வர் பழனிசாமி கடிதம்:

இந்நிலையில், சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காணமால் போன 3 தமிழர்களின் நிலையை  கண்டடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும்,  காயமடைந்த 3 தமிழர்களுக்கு உரிய சகிச்சை அளிக்க சூடானில் உள்ள இந்த தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: