புல்புல் புயல் பாதிப்புக்கு பின் அரசிடமிருந்து இதுவரை ஒரு பைசா கூட பெறவில்லை: முதல்வர் மம்தா பானர்ஜி வேதனை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது முதல்வர் மம்தா பேசியதாவது: மாநிலத்தை புல்புல் புயல் தாக்கியதற்கு அடுத்த நாள் பிரதமர் மோடி டிவிட்டரில் மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என்று உறுதியளித்தார். உள்துறை அமைச்சரும் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று வரை மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா கூட நிதியுதவியாக வரவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் சேதமதிப்புக்களை பார்வையிட்ட மத்திய குழுவிடம் ₹23,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்து வழங்கப்பட்டது.  ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியுதவியும் வரவில்லை. புயல் காரணமாக 14 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் நாசமடைந்தது. 15 பேர் உயிரிழந்தனர். மாநில அரசு 1,200 கோடி நிவாரண நிதியாக வழங்கியது. அதிக இழப்புக்களை சந்தித்த விவசாயிகளுக்கு 5,000 நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

Related Stories: