கார்னிவால் அபார பந்துவீச்சு 187 ரன்னில் சுருண்டது ஆப்கானிஸ்தான்

லக்னோ: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 187 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியின் ரகீம் கார்னிவாலின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அந்த அணி 68.3 ஓவரில் 187 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.

ஜாவேத் அகமதி அதிகபட்சமாக 39 ரன் எடுத்தார். ஆமிர் ஹம்சா 34, அப்சர் ஸஸாய் 32, இசானுல்லா 24, யாமின் அகமத்ஸாய் 18, இப்ராகிம் ஸத்ரன் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் கார்னிவால் 25.3 ஓவரில் 5 மெய்டன் உட்பட 75 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். ஹோல்டர் 2, வாரிகன் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்துள்ளது.

Related Stories: