டிசம்பர் 25, 26ம் தேதிகளில் ஏழுமலையான் கோயிலில் 13 மணி நேரம் நடை அடைப்பு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 25, 26ம் தேதிகளில் 13 மணி நேரம் நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:டிசம்பர் 26ம் தேதி காலை 8.08 மணி முதல் 11.16  மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கோயில் சம்பிரதாயப்படி சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது 6 மணி நேரத்திற்கு முன்னதாக கோயில் நடைகள் மூடப்படுவது வழக்கம்.

அதன்படி, டிசம்பர்  25ம் தேதி இரவு 11 மணிக்கு கோயில் நடைகள் மூடப்படுகிறது. இதையடுத்து, 26ம் தேதி வியாழக்கிழமை காலை 12 மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்படும். தொடர்ந்து கோயில் சுத்தம் செய்யப்பட்டு அர்ச்சகர்கள் சுப்ரபாதம், தோமாலை சேவை,  பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக நடைபெற உள்ளது. இதையடுத்து, பிற்பகல் 2 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: