மராட்டியத்தில் கிச்சடி அரசாங்கம் தேவையில்லை; பட்னாவிஸ்: விவசாயிகளின் பிரச்னை தீர்க்கவே பாஜகவுடன் கூட்டணி; அஜித் பவார்

மும்பை: மராட்டிய மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இவர்களுக்கு மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மராட்டியத்தில் பல நாட்களாக ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலைவயில் தேசியவாத காங்கிஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது.

அஜித்பவார் விளக்கம்

விவசாயிகளின் பிரச்னை உள்ளிட்டவற்றை தீர்ப்பதற்காக பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித்பவார் தெரிவித்துள்ளார். நிலையான அரசு அமைந்தால் மாநில பிரச்னைகள் தீரும் என்பதால் தான் பாஜகவுக்கு ஆதரவு என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

சிவசேனா கட்சி மக்களின் முடிவை ஏற்காமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது என்று முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி தொடர்வது நல்லது இல்லை என தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார். மராட்டியத்துக்கு நிலையான அரசு தேவை என்றும், கிச்சடி அரசாங்கம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டிய மாநில முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித்பவாருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரகாசமான எதிர்காலத்திற்காக பாஜக - தேசியவாத காங்கிரஸ் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: