பள்ளிக்கரணையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

வேளச்சேரி: பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகளை குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் வந்தன. இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் பள்ளிக்கரணை பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாலிபர் சந்தேகத்துக்கு இடமாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து   கையில் இருந்த பையை சோதனையிட்டபோது அதில் கஞ்சா சிறு சிறு பொட்டலங்களாக இருந்தன.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பள்ளிக்கரணை வரதராஜபுரம் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த சேர்ந்த சதீஷ் (31) என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர் வைத்திருந்த பையில் மொத்தம் 400 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, அவர் எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார்.   யார் யாருக்கெல்லாம் விற்கிறார்  என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: