குன்னூர் மலை ரயில் பாதையில் பாறைகள் வெடிவைத்து அகற்றம்: வன உயிர் ஆர்வலர்கள் எதிர்ப்பு

குன்னூர்: நீலகிரி மாவட்டம்  குன்னூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ரயில் பாதையில்  ஹில்க்ரோ பகுதியில் பாறைகள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்ததால் கடந்த  16ம் தேதி முதல் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை  முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும் தண்டவாளங்களில் மண் மற்றும்  ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணியில் ரயில்வே  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரன்னிமேடு முதல் ஹில்க்ரோ வரை தண்டவாளங்களில் விழுந்துள்ள ராட்சத பாறைகளை வெடி வைத்து தகர்த்து  வருகின்றனர்.  நீலகிரி மாவட்டத்தில் பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்க  தடை  விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்வே அதிகாரிகள் பாறைகளை வெடி வைத்து அகற்ற  உத்தரவிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.   மேலும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள மலை ரயில் பாதை அடர்ந்த  வனப்பகுதி என்பதால் வன விலங்குகள் அதிகமாக உள்ளன.  பாறைகளுக்கு  வெடி வைப்பதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வன உயிர் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>