பெற்றோர் கண்காணிப்பு இல்லாததே காரணம்: செந்தில்குமார், காவல்துறை துணை ஆணையர்

மொபைல் போனில் கேம் விளையாடும் குழந்தைகளை பெற்றோர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் ஸ்மார்ட் போன் தரும் போது அதை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள், என்ன விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க  வேண்டும். இணையதள பயன்பாட்டை பார்க்க வேண்டும். இப்போது இணையதள பயன்பாடு மிகவும் எளிதாகி விட்டது. ஒரு காலத்தில் 1 ஜிபி இணையதள பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் இருந்தது. இப்போது 100 ஜிபி கூட குறைந்த  கட்டணத்தில் பெற முடிகிறது. இணையதள வசதி எளிதாக கிடைக்கிறது.  பள்ளி படிக்கும் மாணவர்கள் தான் அதிகமாக பப்ஜி, ப்ளூவேல் போன்ற கேம்களுக்கு அடிமையாகி விட்டனர். கல்லூரி அளவில் ஒரு சிலர் தான் இந்த கேம்களை  விளையாடுகின்றனர். பள்ளி படிக்கும் குழந்தைகளைதான் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் அவர்கள் சரியாக தூங்குகிறார்களா, அந்த நேரத்தில் அவர்கள் போனை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.  ஆனால், பெற்றோர்கள் கண்காணிப்பு குறைந்து வருகிறது.குழந்தைகள்  ஒரு அறையிலும், பெற்றோர்கள் ஒரு அறையில் இருந்து கொண்டு அவரது கையில் போனை கொடுத்தால் இரவு முழுவதும் அந்த குழந்தை கேம்களை விளையாடுவார்கள். அந்த மாதிரியான சூழ்நிலை ஏற்படாதவாறு பார்த்து  கொள்ள வேண்டும்.

மொபைல் போனை பயன்படுத்தாமல் இருக்க சைல்டு லாக் போட ேவண்டும். அந்த லாக் போட்டு வைத்து அவர்கள் இரவு நேரங்களில் கேம் விளையாடுவதை தடுக்க வேண்டும். ஒரு கேம் விளையாடும் போது அந்த கேம்மில் என்ன  மாதிரியான புரோகிராம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். அதன்பிறகு அந்த கேம்மை விளையாட பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். முடிந்த அளவு குழந்தைகளை வெளியில் அழைத்து செல்ல வேண்டும். வீடியோ கேம் போன்ற  விளையாட்டுக்கு பதிலாக ஓடி, ஆடக்கூடிய விளையாட்டுகளை விளையாட அவர்களை அறிவுறுத்த வேண்டும். டிக்டாக்கில் பிரச்னையை ஏற்படுத்தக்கூடிய மோசமான மற்றும் ஆபாச வீடியோ போன்று எடுத்து வெளியிட ஆரம்பித்தார்கள். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்  டிக்டாக்கை தடை  செய்தார். பிறகு அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி விட்டது. அதன்பிறகு அந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை   அணுகியது. அப்போது சம்பந்தப்பட்ட நிறுவனம் மோசமான வீடியோ வரவிடாமல் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று உத்தரவாதம் கொடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட பிறகே டிக் டாக் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த நிறுவனம்  உத்தரவாதத்தை மீறினால் அவதூறு வழக்கு சென்றால் நடவடிக்ைக எடுக்கும் அளவுக்கு வழிவகை உள்ளது.

இந்த டிக்டாக் பயன்படுத்த அந்த நிறுவனம் தவறான வழியில் பயன்படுத்த அனுமதி செய்தால் அவதூறு வழக்கு செல்லலாம். மேலும், பிரச்சனைக்குரிய வீடியோ தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்தால் உடனே நீக்கி விடும்.  இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும். அதற்காக நோடல் அதிகாரிகள்  நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் டிக் டாக் வீடியோ பதிவு செய்வதை தவிர்க்க பெற்றோர்கள், ஆசிரியர்களும் அந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்க  வேண்டும். மேலும், குழந்தைகளின் மனநிலையை ெகாடூரமாக மாற்றுவதாக வீடியோ கேம்கள் இருப்பது அறிந்தால் அதை தடை செய்யலாம். அதற்கு சில நடைமுறைகள் இருக்கிறது. அதை பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கலாம். முடிந்த அளவு  குழந்தைகளை வெளியில்  அழைத்து செல்ல வேண்டும். வீடியோ கேம் போன்ற விளையாட்டுக்கு பதிலாக ஓடி,  ஆடக்கூடிய விளையாட்டுகளை விளையாட அவர்களை அறிவுறுத்த வேண்டும்.

Related Stories: