இலவசமாக சூப் தர மறுத்ததால் வாலிபர் முகம் பிளேடால் கிழிப்பு : போதை ஆசாமி கைது

அண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ஷேக் பரீத் (38). இவர் ஐசிஎப் அம்பேத்கர் ரோட்டில் சூப் கடை நடத்துகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (65). இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் ஷேக் பரீத் கடைக்கு சென்று, இலவசமாக சூப் கேட்டுள்ளார். அதற்கு ஷேக் பரீத், ‘பணம் கொடுத்தால்தான் சூப் தருவேன்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த லட்சுமணன், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து ஷேக் பரீத் முகத்தில் சரமாரியாக கிழித்துவிட்டு தப்பியோடினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிஎப் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய லட்சுமணனை கைது செய்தனர்.

Related Stories:

>