சினிமா பாணியில்... ஆடு மேய்க்கும் வாலிபரை காதலித்து மணந்த எம்.ஏ. மாணவி

பெங்களூரு: காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். அதேபோல ஜாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டது காதல் என்றும் சொல்வது உண்டு. இதை நிரூபிப்பது போன்ற சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகா ஷீகேஹட்டி கிராமத்தை சேர்ந்த வாலிபர் அருண். பியூசி வரை படித்துவிட்டு ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதே ஊரை சேர்ந்த இளம்பெண் அம்ருதா. இவர் எம்.ஏ. படித்து வருகிறார். அருண் மீது அம்ருதாவுக்கு காதல் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அருணிடம் தெரிவித்தார். முதலில் தயங்கிய அருண் பின்னர் சம்மதம் தெரிவித்தார்.

கல்வி அந்தஸ்தை மறந்து இருவரும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் அம்ருதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆத்திரம் அடைந்த அவர்கள் அம்ருதாவிடம், அருணுடனான காதலை முறித்துக்கொண்டு தாங்கள் பார்க்கும் பையனை திருமணம் செய்து கொள்ளும்படி புத்திமதி கூறினர்.

இந்நிலையில், சம்பவத்தன்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தபோது நைசாக வீட்டைவிட்டு வெளியேறிய அம்ருதா, நேராக காதலன் அருண் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார். தனக்காக உற்றார் உறவினர்களை ஒதுக்கிவிட்டு வந்த அம்ருதாவின் செயலால் நெகிழ்ந்து போன அருண், அம்ருதாவுக்கு தாலி கட்டினார்.

Related Stories:

>