4,000 டன் வெங்காயம் இறக்குமதிக்கு டெண்டர்

புதுடெல்லி:  வெங்காயம் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லி உட்பட நாட்டின் சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சந்தைக்கு வரத்தை அதிகரித்து வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார். இதனை இறக்குமதி செய்ய மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசிக்கு உத்தரவு பிறப்பி–்க்கப்பட்டிருந்தது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், வரும் 15ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 4,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய 2 டெண்டர்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் ஒரு டெண்டர் 14ம் தேதியும், மற்றொரு டெண்டர் 18ம் தேதியும் முடிவடையும். டெண்டர் கோருவோர், சந்தைக்கு அனுப்ப ஏதுவாக உடனடியாக வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: