இம்ரான்கானை புகழ்ந்து பேசிய சித்துவுக்கு பாஜ கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நரோவால் மாவட்டத்தில் அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம், நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. முதல்  கட்டமாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப்  முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் நவஜோத் சிங் சித்து உள்பட 500 யாத்திரீகர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்ட பேருந்துகளை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய சித்து, `சிக்கந்தர் பயத்தினால் உலகை வென்றார்.

ஆனால், நீங்களோ உலகில் உள்ள அனைவரையும் இதயத்தால் வென்று விட்டீர்கள். எனவே, நீங்கள் இதயங்களின் அரசனாகி உள்ளீர்கள்,’ என்று இம்ரான்கானை புகழ்ந்து பேசினார். இது குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறுகையில், ``புகழ்ந்து பேசியிருப்பதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானையும் அதன் பிரதமரையும் சித்து அரியணை ஏற்றி உள்ளார். 14 கோடி சீக்கியர்களின் பிரதிநிதியாக அவருக்கு யார் அதிகாரம் அளித்தது? அவர் இந்திய அரசு சார்பில் செல்லவில்லை,’’ என்றார்.

Related Stories: