வக்கீல்கள்-போலீசார் மோதல் எதிரொலி நீதிமன்ற பணிகள் 4வது நாளாக முடக்கம்

புதுடெல்லி : டெல்லியில் நான்காவது நாளாக நேற்றும் வக்கீல்கள் போராட்டம் நடந்தது. டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவதில் தொடங்கிய தகராறு, கலவரமாக மாறியது. அதையடுத்து போர்க்களமான அந்த வளாகத்தில் போலீசின் ஒரு வாகனம் தீக்கிரையானது. மேலும் டஜன் கணக்கில் போலீஸ் வாகனங்களை வக்கீல்கள் சூறையாடினர். அதில் 20க்கும் அதிகமான போலீசார் காயம் அடைந்தனர். மேலும் பல வக்கீல்கள் காயம் அடைந்தனர்.அதைத் தொடர்ந்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாக நேற்றும் வக்கீல்கள் பணிக்கு திரும்பாததால், அலுவல்கள் நீதிமன்றத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது.  

பெயர் குறிப்பிட விரும்பாத வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘‘துப்பாக்கிச்சூடு மற்றும் வக்கீல்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என்றார். இதற்கிடையே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக தங்களை தாக்கிய வக்கீல்கள் மீது போலீசார் அளித்த புகாரின்பேரில் 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: