அசாமில் மின்சார பேருந்து அறிமுகம்: எங்களுடைய நோக்கம் மாசில்லா அசாம் மற்றும் இந்தியாவை உருவாக்குவது... சர்பானந்தா சோனோவால் பேச்சு

திஸ்பூர்: அசாமில் மாசில்லா மின்சார பேருந்துகளை அம்மாநில முதல்வர் சோனோவால் தொடங்கி வைத்தார். டெல்லி மற்றும் தலைநகர் மண்டலத்தில் காற்றுமாசு மிக கடுமையாக அதிகரித்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. அண்டை மாநில விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதால், அதில் இருந்து கிளம்பும் புகை டெல்லி வான் மண்டலத்தை வந்தடைந்து மாசை உருவாக்கி வருகிறது. தொடர் காற்று மாசு காரணமாக, மக்களுக்கு மூச்சுத்திணறல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் முகமூடி அணியாமல் வெளியே வரவேண்டாம் என்று அரசால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் காற்று தர குறியீடு 500க்கும் மேல் உள்ளது. இது மித அளவை விட 5 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் மாசடைந்த காற்றானது வட இந்தியாவில் இருந்து கிழக்கு கடலோரம் வழியே வந்து தமிழகம் வரை தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் காற்று மாசு தலையாய பிரச்சனையாக உருவெடுத்து வரும் நிலையில் அதனை கலைய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் அசாமில் மின்சார பேருந்துகளை முழுவதுமாக இயக்க முடிவு செய்துள்ள மாநில அரசு 15 பேருந்துகளை பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் கவுகாத்தி நகரில் நேற்றிரவு 15 மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

பின்னர் பேசிய அவர்; எங்களுடைய நோக்கம் மாசில்லா அசாம் மற்றும் இந்தியாவை உருவாக்குவது. அதனால் நாங்கள் கவுகாத்தி நகரில் 15 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். அசாம் முழுவதும் மின்சார பேருந்துகளை பரவலாக கொண்டு வருவோம் என கூறினார்.

Related Stories: