வெலிங்டன்: இங்கிலாந்து அணியுடன் நடந்த 2வது டி20 போட்டியில், நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது.வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. கப்தில் 41 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் 42 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கிராண்ட்ஹோம், டெய்லர் தலா 28 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் ஜார்டன் 3, சாம் கரன் 2, சாகிப் முகமது, அடில் ரஷித், கிரிகோரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.