அசத்துகிறது ஆர்ப்பிட்டர் நிலாவில் புதிய வாயு இஸ்ரோ கண்டுபிடிப்பு

புதுடெல்லி: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -2 விண்கலத்தை கடந்த ஜூலையில் இஸ்ரோ அனுப்பியது. அதில் இருந்து நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய வேண்டிய விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி செயல்படாமல் கீழே விழுந்ததால் செயல்படாமல் போனது. இருப்பினும், சந்திரயானின் ஆர்ப்பிட்டர், நிலவின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக சுற்றி வந்து ஆய்வுகளை செய்து வருகிறது. கடந்த மாதம் இது எடுத்து அனுப்பிய நிலவின் மிக நெருக்கமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. இதன் மூலம், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான்- 40 என்ற வாயு மூலக்கூறுகள் இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. இது பற்றிய தகவலை, தனது டிவிட்டர் பக்கத்தில் அது வெளியிட்டுள்ளது. அதில், ஆர்கான்- 40 வாயுவின் தோற்றம், அதன் இயக்கம் குறித்த விளக்கப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது.

Related Stories: