எனது மகன் சுஜித் வில்சன் உயிருடன் மீண்டு வர பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: சுஜித்தின் பெற்றோர் உருக்கம்

திருச்சி: குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததில் இருந்து மீட்பு பணிகள் அனைத்தும் சரியாக நடைபெற்றது என சுஜித்தின் தந்தை ஆரோக்கியதாஸ் தெரிவித்தார். மேலும் மீட்பு பணிக்கு உதவிய முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், ஆணையர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் சுஜித்தின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். தங்களால் இயன்ற அளவிற்கு சுஜித்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக முதல்வர் ஆறுதல் கூறியதாக தெரிவித்தனர். எனது மகனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என சுஜித்தின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் தொடர கூடாது எனவும்; எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும் என தாய் கலாமேரி வேதனையுடன் தெரிவித்தார். சுஜித் தவறி விழுந்து இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை எனவும் கூறினார். குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழந்த நாள் முதலே அனைவரும் இரவு பகல் பாராது மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர் என தெரிவித்தனர். மேலும் அனைவரும் வெயில் மழை பாராது சுஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: