சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம்: இந்து சமய அறநிலையத்துறை வேண்டுகோள்

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளதால், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதால், தமிழக இந்து சமய அறநிலையத்துறையும் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு வராமல் இருக்க பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஐயப்ப குருசாமிகளை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து பக்தர்கள் உடுத்தி செல்லும் ஆடைகளை பம்பை நதியில் களையும் வழக்கத்தை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: