2 குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது: அசாமில் 2021 முதல் புதிய திட்டம்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என அம்மாநில அரசு அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.  இதில், அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு  இனி அரசு வேலை வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி திட்டம், 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதேபோல், வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கும் புதிய கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, நிலமற்ற பழங்குடியின மக்களுக்கு  விவசாயத்திற்காக 43,200 சதுரஅடி நிலமும், வீடு கட்டுவதற்கு நிலமும் வழங்கப்படும். இது தவிர, பேருந்து கட்டணத்தை 25 சதவீதம் அதிகரிப்பது, விதவைகளுக்கு மாதம் ரூ.300 வழங்கும் திட்டம் போன்றவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories:

>