மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் 2வது முறை போக்சோவில் கைது

அண்ணாநகர்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை 2வது முறையாக போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.வில்லிவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (21). கடந்த 3 மாதத்துக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தன், சம்மந்தப்பட்ட பள்ளி மாணவியை மிரட்டி, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஆனந்தனை மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>