ஏடிஎம்மை உடைத்து ரூ4 லட்சம் கொள்ளை

ஆவடி: திருநின்றவூர்-பெரியபாளையம் சாலையில் உள்ள காவனூர் கிராமத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று காலை பொதுமக்கள் இங்கு பணம் எடுக்க சென்றபோது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கட்டிட உரிமையாளருக்கு தெரிவித்தனர். உடனே உரிமையாளர் ஏடிஎம் நிறுவன மேலாளர் விஜய் என்பவருக்கு தெரிவித்தார். விஜய் வந்து பார்த்தபோது சிசிடிவி மீது வண்ண ஸ்பிரே அடித்துவிட்டு வெல்டிங் மெஷின் உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ₹4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

Related Stories:

>